வைரல் வீடியோ : மிகப் பெரிய சொகுசு கப்பல் கட்டி முடிக்கப்பட்டு கடலில் விடப்படும் அற்புத காட்சி

மிகப் பெரிய சொகுசுக் கப்பலான ஜென்டிங் ட்ரீம் கட்டி முடிக்கப்பட்டு கடலில் விடப்படும் காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

விமானங்களின் வரவிற்கு பின்பு கப்பல் பயணம் முக்கியமான பயணிகள் போக்குவரத்தாக இல்லாமல் போய் விட்டது. ஆனால் சுற்றுலாவாக கப்பலில் சொகுசு பயணம் மேற்கொள்பவர்கள் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ship1

இப்படி சுற்றுலா செல்வதற்காக உருவாக்கப் படும் சொகுசு கப்பல்கள் பல நவீன வசதிகளையும் கொண்டு மிக பிரம்மாண்டமாக கட்டமைக்கப்படுகின்றன. பொதுவாக கப்பல்கள் அனைத்தும் கடலுக்கு வெளியில் வைத்து தான் கட்டமைக்கப்படும். இப்படி கட்டப்படும் பிரம்மாண்ட கப்பல்கள் கடலில் விடப் படும் காட்சியே அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

அந்த வகையில் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய சுற்றுலாக் கப்பலான ஜென்டிங் ட்ரீம் கட்டி முடிக்கப்பட்டு கடலில் விடப்படும் காட்சி கீழ்  வரும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

ship2

ship3

ship4

ஜென்டிங் ட்ரீம் கப்பல் 335.33 மீட்டர் நீளமும் 39.7 மீட்டர் அகலமும் கொண்டது. பல சொகுசு வசதிகளையும் கொண்டுள்ள இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 3352 பேர் பயணிக்க முடியும்.

இந்த பிரம்மாண்ட கப்பல் ஜெர்மனியின் மேயர் வெர்ப்ட் துறைமுகத்தில் வைத்து கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி கடலில் விடப்பட்ட அற்புதமான காட்சியை இந்த வீடியோவில் காணலாம்.

Credit : HD1080ide