வைரல் வீடியோ : கால்களினாலேயே மர பொம்மைகளை செய்து விற்கும் மாற்றுத்திறனாளி சகோதரர்

Geraldo Pereira கால்களினாலேயே மர பொம்மைகள் செய்வதை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

Geraldo Pereira பிறக்கும் போதே கைகளை இழந்தவர். ஆனால் இவர் உழைப்பதற்கும் புகழ் பெறுவதற்கும் இவரது மன உறுதியின் முன்பு எதுவும் தடையாய் இருக்கவில்லை.

skill1

skill2

Photos Credit : www.Ntd.tv

Geraldo Pereira கால்களினாலேயே சிறிய மர லாரி, கார் பொம்மைகளை செய்து விற்பனை செய்கிறார். மர துண்டுகளை ரம்பம் பிடித்து அறுப்பது, அளவு குறிப்பது, சுத்தியலால் மர துண்டுகளில் ஆணி அடிப்பது என்று பொம்மைகளை உருவாக்க தேவைப் படும் எல்லா வேலைகளையும் இவர் கால் விரல்களாலேயே செய்கிறார். இவர் தனது அசாத்தியமான திறமையினால் ஒரு மணி நேரத்தில் ஒரு சிறிய கார் பொம்மையையும், இரண்டு மணி நேரத்தில் ஒரு பெரிய லாரி பொம்மையையும் செய்து விடுகிறார்.

skill3

skill4

Photos Credit : www.Ntd.tv

Geraldo Pereira தனது அசாத்தியமான திறமை, மன உறுதி, கலை உணர்வு ஆகியவற்றால் அந்த பகுதி மக்களிடையே புகழ் பெற்று விளங்குகிறார். அந்த பகுதி மக்கள் இவரை ஒரு நட்சத்திர அந்தஸ்த்துடன் பார்க்கின்றனர்.

Credit : Caters Clips