உங்கள் ஸ்மார்ட்போனிற்கு 300 ரூபாய்க்குள் என்னென்ன அசத்தலான கெட்ஜெட்ஸ் வாங்கலாம்?.

1.6-Ways Audio Splitter

audio

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து  உங்கள் ஸ்மார்ட்போனில் பாட்டு கேட்க விரும்பினால் அதற்கு இந்த 6-Ways Audio Splitter ஒரு அருமையான சாதனம். இதை ஸ்மார்ட்போனுடன் பொருத்தி ஸ்மார்ட்போனில் ஓடும் பாட்டை ஐந்து பேர் ஹெட் போன் மூலம் கேட்கலாம்.

 

2.USB Fan

usb fan1

usb fan2

ஸ்மார்ட் போனில் பொருத்தி பயன்படுத்தும் சிறிய ரக USB பேன்கள் தற்போது 150 ரூபாயிலிருந்தே கிடைக்கின்றன. இந்த பேன்கள் பெரிய அளவில் காற்றைக் கொடுக்காவிட்டாலும் விசிறியால் வீசும் அளவிற்கு காற்றைக் கொடுக்கும்.

 

3.Selfie Flash

selfie1

உங்கள் ஸ்மார்ட்போனில் செல்பி எடுப்பதற்கு பிளாஷ் லைட் இல்லையா இருக்கவே இருக்கின்றது Buddy Selfie Flash. இதை ஸ்மார்ட்போனின் ஹெட் போன் ஜாக்கில் பொருத்தி விட்டால் போதும் பிளாஷ் லைட்டுடன் அசத்தலான செல்பி எடுக்கலாம்.

 

4.Waterproof Pouch

water proof 2

water proof1

வாட்டர் ரெஸிஸ்டண்ட் இல்லாத ஸ்மார்ட் போன்களை நீரின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க Waterproof Pouch பயன்படுகின்றது. இந்த பவுச்சில் ஸ்மார்ட்போனை வைத்து நீரில் வைத்தும் போன் பேசலாம் பாட்டு கேட்கலாம் போட்டோ கூட எடுத்துக் கொள்ளலாம்.

 

5.Smartphone Lens Kit

lens2

lens1ஸ்மார்ட்போனின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று போட்டோ எடுக்க பயன்படுவது. சிறந்த போட்டோ எடுக்க நல்ல கேமரா வேண்டும். ஆனால் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் கேமரா அந்த அளவிற்கு சிறப்பாக இருப்பதில்லை. இதற்கு உதவும் சாதனம் தான் Smartphone Lens Kit. இதை ஸ்மார்ட்போன் கேமராவுடன் சேர்த்து பொருத்தி சிறந்த போட்டோக்களை எடுக்கலாம்.