வீடியோ : கிரிக்கெட் போட்டிகளில் வீசப்பட்ட சிறந்த ஸ்விங் பந்துவீச்சுகளின் தொகுப்பு

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், லாரா, டிராவிட் போன்ற தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட தயங்குவது ஸ்விங் பவுலர்களை எதிர் கொள்ளத்தான். ஸ்விங் பந்துகள் எப்படிப் பட்ட பேட்ஸ்மேனையும் ஏமாற்றி ஆட்டமிழக்க வைக்கும் திறனுடையவை.  ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சிறந்த ஸ்விங் பவுலர்களை வைத்துள்ள அணிதான் வலிமை வாய்ந்த அணியாக விளங்கும்.

இதுவரையில் கிரிக்கெட் உலகம் வாசிம் அக்ரம், ரிச்சர்டு ஹட்லீ,கிளென் மெக்ராத், வக்கார் யூனிஸ், டேல் ஸ்டெயின், ஜேம்ஸ் ஆண்டர்சன் என்று தலை சிறந்த ஸ்விங் பவுலர்களை பார்த்துள்ளது. தற்போது இந்திய அணியில் விளையாடும் புவனேஷ்வர் குமாரும் சிறப்பாக ஸ்விங் பந்துகளை வீசக் கூடியவர் தான்.

பொதுவாக ஸ்விங் பவுலிங்கில் கன்வென்ஷனல் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், காண்ட்ராஸ்ட் ஸ்விங் என்று மூன்று வகைகள் உள்ளன. கன்வென்ஷனல் ஸ்விங்கில் இன் ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர் என்று இரண்டு பிரிவுகள்  உள்ளன. கிரிக்கெட் வரலாற்றில் இப்படி அனைத்து வகை ஸ்விங் பவுலிங்குகளிலும் இதுவரையில் வீசப்பட்ட பத்து சிறந்த ஸ்விங் பந்துவீச்சுகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Credit : Sports Blast