இரண்டு புறமும் வீடுகளும் கடைகளும் சூழ்ந்த தெருக்களின் வழியாக ஓடும் ரயில் (வீடியோ இணைப்பு)

உங்கள் வீட்டு தெரு வழியாக ரயில் ஓடினால் எப்படி இருக்கும்?. இப்படி ஒரு விசித்திரமான ஆபத்தான ரயில் பாதை வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில்
அமைந்துள்ளது. இந்த ரயில் பாதை, இரண்டு புறமும் வீடுகளும் கடைகளும் சூழ்ந்த தெருக்களின் வழியாக செல்கின்றது. அதுவும் வீடுகள் மற்றும் கடைகளுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது. அதாவது வீட்டை விட்டு , கடையை விட்டு இறங்கினால் ரயில் பாதை தான் இருக்கும்.

4

5

6

7

வியட்நாம் நாட்டின் பழமை வாய்ந்த நகரமான இந்த ஹனோய் நகரில் வசிக்கும் மக்கள் நெருங்கிய ரயில் சூழலில் வாழ பழகி விட்டனர். நம் ஊரில் தெருக்களின் வழியே கார் செல்வதை போல் தான் இவர்கள் தெருக்களின் வழியாக ரயில் ஓடுவதை எடுத்துக் கொள்கின்றனர்.  ரயில் வராத நேரங்களில் இந்த ரயில் பாதைகள் பெரியவர்கள் நாற்காலி போட்டு அமர்ந்து பேசும் இடமாகவும் குழந்தைகள் விளையாடும் இடமாகவும் மாறி விடுகின்றது.

Credit : ODN

வியட்நாம் நாட்டில் இப்படி ஆபத்தான ரயில் பாதைகள் செல்லும் இடங்களில் விதிகளை மீறி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ரயில் பாதை கடக்கும் இடங்கள் உள்ளன. தற்போது வியட்நாம் அரசாங்கம் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்த ரயில் பாதைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.