வீடியோ : டென்னிஸ் பந்து தயாரிக்கப்படும் முறை

ஆடைகளில் ஜீன்ஸ்களுக்கு என்று ஒரு தனி அடையாளம் இருப்பதை போல பந்துகளில் டென்னிஸ் பந்திற்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கின்றது.

வெளிர் மஞ்சள் நிறத்தில் எடை குறைவாக இருக்கும் டென்னிஸ் பந்துகளை பயன்படுத்தி எல்லோரும் எப்போதாவது விளையாடி இருப்போம். டென்னிஸ் பந்துகள், டென்னிஸ் விளையாட்டுக்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கபட்ட்டாலும் வீடு போன்ற உள் அரங்கில் பிற விளையாட்டுக்களை விளையாடவும் ஏற்றது .

சரி இந்த டென்னிஸ் பந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன ?.

டென்னிஸ் பந்து தயாரிப்பு தொழிற்சாலையில்
முதலில் ரப்பருடன் பிற வேதி பொருட்கள் கலந்த கலவை அழுத்தி உலர்த்தப்படுவதில் இருந்து டென்னிஸ் பந்து தயாரிப்பு துவங்குகின்றது. பின்பு அந்த ரப்பர் கலவை ஷீட்டுகளில் இருந்து பந்தின் பாதி பாகம் தயாரிக்கப் படுகின்றது. பின்பு இரண்டு பாதி பாகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு முழு பந்து தயாரிக்கப்படுகின்றது. இறுதியில் டென்னிஸ் பந்துகளுக்கு என்றே பிரத்யேக அடையாளமாக இருக்கும் மஞ்சள் நிற லேயர் டென்னிஸ் பந்துகள் மீது ஒட்டப்படுகின்றது.

CREDIT : TRAMBOLINO

இப்படி டென்னிஸ் பந்து தயாரிக்கப்படும் விதத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.