நகரத்தின் சாலைகளையே விமான நிலையமாக மாற்றும் எதிர்கால விமான நிலைய திட்டம்

பொதுவாக ஒரு விமான நிலையத்தை உருவாக்க அதிக அளவிலான இடம் தேவைப்படும். அதுவும் விமான நிலையம் நகரத்திற்கு உள்ளாகவோ அல்லது நகரத்திற்கு மிக அருகிலோ உருவாக்கப்பட வேண்டும். உலகமயமாக்கலுக்கு பிறகு பெரிய அளவில் வளர்ந்து வரும் நகரங்களில் குடியிருப்புகளுக்கும் தொழில் செய்வதற்குமே போதிய இடம் கிடைப்பதில்லை.இதில் விமான நிலையத்திற்கு அதிக அளவில் இடம் ஒதுக்குவது பிரச்சினைக்கு உரிய விஷயம் தான்.

எனவே இந்த பிரச்சினையை போக்க மாற்று வழிகளில் விமான நிலையத்தை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

1

2

3

Photos Credit : Alex Sutton

அந்த வகையில் London architectural school இல் படித்து வரும் Alex Sutton என்ற மாணவர் தனது இறுதி ஆண்டு ப்ராஜெக்ட்டாக ஒரு ஏர்போர்ட் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த திட்டத்தின் படி நகரத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளின் மீதோ அல்லது நகரத்திற்குள் ஓடும் நதியின் மீதோ மேம்பாலம் அமைத்து அதை விமான ஓடு பாதையாக பயன் படுத்துக்கலாம். விமான நிலைய கட்டிடங்களை அந்த சாலைக்கு ஓரத்திலேயே கட்டி அதை விமான ஓடு பாதையுடன் ஒரு பாலம் மூலம் இணைத்து விட்டால் போதும் ஒரு விமான நிலையம் தயாராகிவிடும்.

Credit : Alex Sutton

இந்த திட்டத்தின் படி விமான நிலையம் கட்டப்பட்டால் விமான நிலையத்திற்கு செல்லும் தூரமும் குறையும் விமான நிலையத்திற்கு என்று தனி இடமும் தேவைப்படாது.