காட்டு விலங்குகளின் அசத்தலான டீம் ஒர்க்கை காட்டும் வீடியோ

தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை ‘டீம் ஒர்க்’. தனியாக ஒருவரே ஒரு வேலையை செய்வதை விட ஒரு குழுவாக இணைந்து செய்யும் போது வேலை சிறப்பாக வருவதுடன் விரைவாகவும் முடியும். இதனால் தான் தற்போது ஐடி நிறுவனங்கள் உட்பட பல பெரு நிறுவனங்களும் டீம் ஒர்க்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

ஏற்கனவே நம் தமிழ் நாட்டில் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” “ஒற்றுமையே வலிமை” என்று டீம் ஒர்க்கின் முக்கியத்துவத்தை விளக்கும் பழமொழிகள் நிறைய உள்ளன.

Credit : The Top 10

அப்படி இந்த வீடியோவும் டீம் ஒர்க்கின் வலிமையை விளங்குபவை தான். இந்த வீடியோவில் வலிமை குறைந்த விலங்குகள் ஒரு குழுவாக இணைந்து தங்களை விட வலிமையான விலங்குகளை வீழ்த்தும் அல்லது விரட்டியடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.