வைரல் வீடியோ : உருளைக் கிழங்கு ஏற்றி செல்லும் லாரியை மடக்கி பிடித்து உருளைக் கிழங்குகளை சாப்பிடும் யானை

உலகமயக்கமாக்களுக்கு பிறகு காடுகளின் பரப்பளவு குறைந்து காட்டு விலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் யானை சிறுத்தை புலி போன்ற காட்டு விலங்குகள் உணவு தேடியும் தண்ணீர் தேடியும் காடுகளுக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு வருவது தொடர் கதையாகி விட்டது.

 

ele1

 

இன்னும் சில புத்திசாலி விலங்குகளோ காடு வழியாக செல்பவர்களிடமும் அந்த வழியாக செல்லும் வாகனங்களையும் உணவிற்காக தாக்க முற்படுகின்றன.

 

Credit : Caters clips

அப்படி இந்த வீடியோவில் மேற்கு வங்காளத்தின் கார்பெட்டா காட்டில் உள்ள ஒரு யானை அந்த வழியாக உருளைக் கிழங்கு ஏற்றிக் கொண்டு செல்லும் ஒரு லாரியை மடக்கிப் பிடித்து அதில் உள்ள உருளைக் கிழங்குகளை சாப்பிடும் காட்சி இடம் பெற்றுள்ளது.