வித்தியாசமாக பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும் ஏரி

செனகல் நாட்டில் காணப்படும் Redba என்ற ஏரியின் நீர் வழக்கத்திற்கு மாறாக பிங்க் நிறத்தில் காட்சியளிக்கின்றது. இந்த ஏரி செனகல் நாட்டின் தலைநகர் டகாரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த ஏரியின் நீரில் அதிக அளவில் காணப்படும் Dunaliella salina என்ற பாசி தான் இவற்றின் பிங்க் நிறத்திற்கு காரணம். இந்த ஏரியின் நீர் அதிக உப்புத் தன்மை வாய்ந்தது.அதிக உப்புத் தன்மை வாய்ந்த நீரில் தான் Dunaliella salina பாசி வளரும். இந்த பாசி ஒளியை கிரகித்து சிவப்பு நிற நிறமிகளை வெளியிடும் திறனுள்ளது.இதன் காரணமாகத்தான் இந்த ஏரியில் உள்ள நீர் பிங்க் நிறத்தில் காணப்படுகின்றது.

இந்த ஏரி பெரும்பாலும் பிங்க் நிறத்திலேயே காட்சியளித்தாலும் செனகலில் வறண்ட காலமான நவம்பர் முதல் ஜூன் வரை பிங்க் நிறம் நன்கு வெளிப்படும்.மற்ற காலங்களில் பிங்க் நிறம் சற்று குறைவாகத்தான் இருக்கும்.

Redba ஏரியின் புகைப்படங்களை பின்வருமாறு பார்க்கலாம்.

 

1

 

2

 

3

 

4