கட்டி முடிக்கப்பட்ட கப்பல் கடலில் விடப்படும் அரிதான காட்சிகள்

தரையில் வைத்துக் கட்டப்படும் பிரம்மாண்ட கப்பல்கள் கடலில் விடப்படும் காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

மனிதனின் மிக முக்கியமான கண்டு பிடிப்புகளில் கப்பலும் ஒன்று.கடந்த நான்கு நூற்றாண்டுகளாக உலகத்தில் நடந்த வணிகம் , ஆதிக்கம், போர் என அனைத்திலும் கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முன்பு உலக நாடுகளிடையே மக்கள் பயணம் செய்ய முக்கிய வாகனமாக விளங்கிய கப்பல் விமானங்களின் வரவால் தற்போது பெரும்பாலும் வணிகத்திற்கு தான் பயன்படுத்தப் படுகின்றது.

பல ஆயிரக்கணக்கான கிலோ எடையை ஏற்றிக் கொண்டு நீரில் மூழ்காமல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் கப்பலின் கட்டுமானம் ஆச்சர்யம் தரக் கூடியது தான். ஒரு கப்பலைக் கட்ட பல கோடிக்கணக்கான ரூபாய் பணமும் பிரம்மாண்ட உழைப்பும் தேவைப் படுகின்றது.

கப்பல்கள் பெரும்பாலும் கடலுக்கு வெளியில் வைத்து தான் கட்டப் படுகின்றன.

ship1

ship2

ship3

ship2

கப்பலின் தொழில்நுட்பங்கள் அனைத்தும் நீரில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் தான் உருவாக்கப்படுகின்றன. தரையில் நகர்வதற்கு சக்கரங்களோ அல்லது வேறு விஷயங்களோ கப்பலில் கிடையாது. இங்கு ஒரு கேள்வி எழுகின்றது அல்லவா, தரையில் வைத்து கட்டப் படும் கப்பல் எப்படி கடலில் விடப் படுகின்றது?. இந்த அரிதான காட்சிகளை இங்கே உள்ள வீடியோவில் காணலாம்.

Credit : Techno Blog