ஒரே நாளில் 3D பிரிண்டிங் மூலம் கட்டப்பட்ட வீடு (வீடியோ இணைப்பு)

ஒரு கட்டிடம் கட்டுவது எவ்வளவு கடினமானது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஒரு கட்டிடம் கட்டி முடிக்க அதிக மனித உழைப்பும் அதிக நேரமும் தேவைப்படுகின்றது. ஆனால் எதிர்காலத்தில் ஒரே நாளில் ஒரு முழு கட்டிடம் கட்டி முடித்து விடலாம்.இதை சாத்தியமாக்கும் தொழில் நுட்பம் தான்

என்பது வேறு ஒன்றுமில்லை வழக்கமாக கம்ப் யூட்டரில் உள்ள உருவத்தை பிரிண்டிங் மெஷின் பயன்படுத்தி பேப்பரில் பிரிண்ட் எடுப்போம் அல்லவா. அதே போல் கம்ப்யூட்டரில் உள்ள உருவத்தை முப்பரிமாண முறையில் நிஜத்தில் உருவாக்குவது தான் 3D Printing.

3D Printing

3d-printing (1)

ஆரம்பத்தில் விளையாட்டாக தொடங்கிய இந்த தொழில்நுட்பம் தற்போது பல்வேறு பொருட்களை மிகக் குறுகிய காலத்தில் குறைந்த செலவில் தயாரிக்கப் பயன்படுகின்றது.

இப்படி சிறிய பொருட்களை தயாரிப்பதை போல ஒரு பெரிய 3D Printing மெஷினை வைத்து முழு கட்டிடத்தையும் பிரிண்ட் செய்யும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்றது.கட்டுமானத்தின் எதிர்காலம் நிச்சயம் 3D Printing தான்.

தற்போது ரஷ்யாவில் இந்த 3D Printing தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரே நாளில் ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது.400  சதுர அடி கொண்ட இந்த வீட்டை அமெரிக்காவை சேர்ந்த Apis Cor என்ற நிறுவனம் 10000 டாலர் செலவில் கட்டிக் கொடுத்துள்ளது.

இந்த வீடு கட்டப்பட்ட விதத்தை இந்த வீடியோவில் காணலாம்.

Credit : Science Channel

இந்த வீட்டின் சுவர் பகுதி, மேல் பகுதி எல்லாம் கான்க்ரீட் கலவையைக் கொண்டு பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.