உலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்

உலகம் முழுவதிலும் அதிகம் விரும்பப்படும் வாகனம் என்றால் அது மோட்டார் பைக் தான். நிறைய பேர் காரை விட மோட்டார் பைக்கில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். மோட்டார் பைக் அதிக அளவில் விரும்பப்படுவதற்கு மேலும் ஒரு காரணம் அதன் குறைந்த விலை தான். ஓரளவு வசதியான நபர்களால் மட்டுமே கார் வாங்க முடியும்.

Credit : MCN – Motorcyclenews.com

தற்போது உலகில் பல நிறுவனங்கள் மோட்டார் பைக்குகளை தயாரிக்கின்றன. மோட்டார் பைக்கின் வடிவம், திறன், தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மோட்டார் பைக்குகளின் விலை மாறுபடுகின்றன.சில ஆயிரம் ரூபாயில் இருந்து கோடி ரூபாய் வரை மோட்டார் பைக்குகள் கிடைக்கின்றன.அந்த வகையில் உலகிலேயே அதிக விலை கொண்ட மோட்டார் பைக்கைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

Ecosse ES1 Superbike என்ற பைக் தான் தற்போது உலகில் அதிக விலையுள்ள மோட்டார் பைக்.இந்த பைக்கின் விலை 3.6 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் சுமார் 23 கோடி ரூபாய்.

அதிக விலைக்கு ஏற்ப இந்த சூப்பர் பைக்கின் தோற்றம், செயல்பாடு, தொழில்நுட்பம் என்று அனைத்தும் அசத்தலாக அமைந்துள்ளது. இந்த பைக்கின் பாடி முழுவதும் கார்பன் பைபரால் உருவாக்கப் பட்டுள்ளது.1000 CC அளவுள்ள 4 Stroke Engine இந்த பைக்கில் பொருத்தப் பட்டுள்ளது.இந்த சூப்பர் பைக் அதிகபட்சமாக 370 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடையது.