வைரல் வீடியோ : எதிர்காலத்தில் வர இருக்கும் பறக்கும் பைக் இப்படித் தான் இருக்கும்

இங்கிலாந்தைச் சேர்ந்த Colin Furze புதுமையான சாதனங்களை உருவாக்குவதில் வல்லவர். அவற்றை வீடியோ எடுத்து யூ ட்யூபை கலக்குவதிலும் கில்லாடி.

அப்படி கடந்த ஆண்டு இவர் உருவாக்கியது தான் இந்த ஹோவர் பைக்.இந்த பைக்கில் கிடைமட்டமாக உள்ள இரண்டு வீல் பகுதியில் இரண்டு ரோட்டர்கள் பொருத்தப் பட்டுள்ளன.இந்த இரண்டு ரோட்டர்களும் பைக் மேல் எழும்ப உதவுகின்றன.ஸ்டியரிங் பைக்கின் திசையை மாற்ற உதவுகின்றது. அத்துடன் இந்த ஹோவர் பைக் இரண்டு பேர் சேர்ந்து தூக்கி வரும் அளவிற்கு எடை குறைவாக உருவாக்கப்பட்டுள்ளது.

Credit : colinfurze

இவர் வீட்டில் உருவாக்கியுள்ள இந்த வாகனம் அதிக தூரம் பறக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் வர இருக்கும் பறக்கும் பைக்கிற்கு ஒரு முன்னோட்டமாக இதை பார்க்கலாம்.

எதிர்காலத்தில் ஒரு பறக்கும் பைக் தயாரிக்கப் பட்டால் அது இந்த மாடலில் அமைய அதிக வாய்ப்புள்ளது.அப்படி இந்த மாடலில் இரண்டு பேர் அமர்ந்து பறக்கும் வசதி, எளிமையாக மேல் எழும்பி எங்கு வேண்டுமானாலும் தரை இறங்கும் வசதி,பறக்கும் போது எளிதாக திசையை மாற்ற ஸ்டியரிங், குறைந்த எடை என்று அனைத்து விஷயங்களும் உள்ளன.