மக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் விமானம் தரையிறங்கும் உலகின் ஆபத்தான ஏர்போர்ட்

பிரின்சஸ் ஜூலியானா ஏர்போர்ட்டிற்கு வரும் விமானம் அருகில் உள்ள மஹோ பீச்சில் இருக்கும் மக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் தரையிறங்கும் காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

Princess Juliana International Airport, Sint Maarten நாட்டில் உள்ள கரீபியன் தீவில் அமைந்துள்ள முக்கியமான ஏர்போர்ட்டாகும். இந்த ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கும் ஓடுபாதைக்கு மிக அருகில் Maho Beach அமைந்துள்ளது. எனவே இந்த ஏர்போர்ட்டிற்கு வரும் விமானம் தரையிறங்கும் போது பீச்சில் உள்ள மக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் தரையிறங்கும். இந்த த்ரில்லான அனுபவத்தைப் பெறுவதற்காகவே Maho Beachற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

a3

a1

a2

a4

a5

Photos Credit : Pinterest

இது தவிர இந்த பீச்சில் இன்னொரு ஆபத்தான விளையாட்டும் உண்டு. பொதுவாக ஜெட் விமானம் கிளம்பும் போது அதிக வேகத்தில் காற்றை பின் திசையில் செலுத்தும்.இவ்வாறு செலுத்தப்படும் காற்றின் வேகம், விமானத்திற்கு பின் புறத்தில் உள்ளவர்களை தூக்கி வீசும் அளவிற்கு வலுவானதாக இருக்கும். இதை இந்த பீச்சிற்கு வருபவர்கள் ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த பீச்சிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள்,விமானம் கிளம்பும் போது விமானத்திற்கு மிக அருகில் இருக்கும் பீச்சின் பகுதியில் நின்று கொள்கின்றனர்.அப்போது விமானத்திலிருந்து வெளிப்படும் பலத்த காற்று அவர்களைத் தூக்கி வீசுகின்றது. இப்படி செய்வது ஆபத்தான விளையாட்டு என்று அங்கு எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டும் அதை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு கொள்வதில்லை.

Credit : MT Aviation