சைக்கிளின் நவீன வடிவம் ‘Aeyo’ (வீடியோ)

ஸ்கேட்ஸையும், சைக்கிளையும் சேர்த்து ‘Aeyo’ என்ற இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது . வழக்கமாக சைக்கிளில் மிதிப்பதற்கு மிதியடிகள் இருக்கும். ஆனால் இந்த வாகனத்தில் மிதியடிகளுக்கு பதில் சறுக்கி செல்ல ஸ்கேட்ஸ் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த வாகனத்தில் பின் பக்கம் இரண்டு ஸ்கேட்ஸும், முன் பக்கம் சைக்கிளை போன்று ஒரு சக்கரமும் உள்ளது. மேலும் சைக்கிளை போன்றே இந்த வாகனத்தில் திசையை மாற்ற ஒரு ஹேண்டில்பார் ஒன்றும் உள்ளது.ஒரு வகையில் இந்த வாகனத்தை சைக்கிளின் நவீன வடிவமாக கருதலாம்.

நிச்சயமாக இது ஸ்கேட்ஸை விட பாதுகாப்பான வாகனம்.அதற்கு காரணம் திசையை மாற்ற இந்த வாகனத்தில் ஹேண்டில்பாரும், தேவைப்படும் போது உடனடியாக நிறுத்த பிரேக்கும் இருப்பது தான்.இந்த வாகனத்தில் இருக்கும் இன்னொரு சிறப்பு இந்த வாகனத்தை எளிதாக மடித்து எடுத்துச் செல்ல முடியும்.மேற்கத்திய நாடுகளில் உடல் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க தற்போது சைக்கிள் ஓட்டும் பழக்கம் அதிகரித்து இருக்கின்றது.அதனால் இந்த வாகனத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.