முக்கிய சாலையின் குறுக்கே விமான ஓடு பாதை அமைந்துள்ள விமான நிலையம்

சாலைக்கு நடுவே ரயில் பாதை கடந்து செல்வதை பார்த்து இருக்கின்றோம். Gibraltar நாட்டில் உள்ள இந்த ஏர்போர்ட்டில் விமான ஓடுபாதை ஒரு முக்கிய சாலையின் குறுக்கே அமைந்துள்ளது. எனவே இந்த விமான நிலையத்தில் விமானம் கிளம்பும் போதும், வந்து இறங்கும் போதும் ஒரு கேட் போட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப் படுகின்றன.

Credit : efbeVideo

Gibraltar, ஐம்பது ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகைக் கொண்ட ஒரு சிறிய நாடு ஆகும்.இந்த நாட்டின் பரப்பளவும் மொத்தம் 4,328/km2 தான்.எனவே இந்த நாட்டில் ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டை உருவாக்க முடிவு செய்த போது வேறு எங்கும் சரியான சமதளமான இடம் கிடைக்கவில்லை. அதனால் இந்த ஏர்போர்ட் Winston Churchill சாலை கடந்து செல்லும் ஒரு முக்கிய பகுதியில் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த ஏர்போர்ட்டின் விமான ஓடு பாதை Winston Churchill சாலையின் குறுக்கே அமைந்துள்ளது.