சீனாவில் அமைந்திருக்கும் அவதார் படத்தின் டவர் வடிவ மலைகள்

James Cameron இயக்கிய அவதார் படத்தில் வரும் மலைகள் மிக வித்தியாசமாக இருக்கும்.அந்த படத்தில் Tower வடிவில் இருக்கும் மலைகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதாக காட்டப்படும். அதை பார்க்கும் போது அந்த காட்சி முழுவதும் கிராபிக்சால் உருவாக்கப் பட்டது என்று தான் எல்லோருக்கும் தோன்றும்.ஆனால் அந்த காட்சிகள் முழுவதும் கிராபிக்ஸ் இல்லை.

china1

அவதார் படத்தில் வரும் அந்த டவர் வடிவ மலைகள் உண்மையிலேயே சீனாவில் அமைந்துள்ளன.

Credit : ling daisly

சீனாவின் Hunan Province இல் உள்ள ZhangJiaJie National Forest Park இல் இந்த டவர் வடிவ மலைகள் உள்ளன.அவதார் படத்தின் காட்சி இவற்றில் உள்ள Hallelujah Mountain இல் நேரடியாக படம் பிடிக்கப் பட்டுள்ளது.முன்பு Southern Sky Column என்று அழைக்கப்பட்ட இந்த மலை அவதார் படத்தின் வெளியீட்டிற்கு பின்பு Avatar Hallelujah Mountain என்று அழைக்கப் படுகின்றது.

china2

இந்த மலைகளில் ஷூட்டிங் முடிந்த பின்பு அவதார் படத்தின் கிராபிக்ஸ் குழுவால் இந்த மலைகள் அந்தரத்தில் மிதப்பது போன்று கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.