வைரல் வீடியோ : இந்த தலைமுறை குழந்தைகளின் புத்திசாலித்தனம்

கடந்த தலைமுறையை விட இந்த தலைமுறை குழந்தைகள் மிக புத்திசாலிகளாக உள்ளனர். கடந்த தலைமுறைக்கு இருபது வயதிற்கு மேல் அறிமுகமான கம்ப்யூட்டர், செல்போன் எல்லாம் தற்போது உள்ள குழந்தைகள் ஏழு வயதிற்குள் பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். இந்த அறிவும் புத்திசாலித்ததனமும் குழந்தைகளின் எல்லா செயல்களிலும் பிரதிபலிக்கின்றது.

Credit : ViralHog

இந்த வீடியோவில் பிறந்து ஒரு வயதிற்கும் குறைவாக இருக்கும் குழந்தையை அதன் பெற்றோர்கள் கட்டிலில் படுக்க வைத்துச் சென்றுள்ளனர்.தூங்கி எழுந்த அந்த குழந்தை பெற்றோர்களைக் காணவில்லை என்றதும் அந்த கட்டிலில் இருந்து இறங்க நினைக்கின்றது.ஆனால் தரையைத் தொடுவதற்கு கால் எட்டவில்லை. இங்கே தான் அந்த குழந்தையின் புத்திசாலித்தனம் வெளிப்படுகின்றது. அந்த கட்டிலில் இருந்த தலையணைகளை எடுத்து அந்த குழந்தை தரையில் ஒன்றன் மீது ஒன்றாக போடுகின்றது. இப்போது தலையணையின் மீது குதித்து எளிதாக கட்டிலில் இருந்து இறங்குகின்றது. அந்த அறையில் இருந்த சிசி டீவி கேமரா மூலம் இந்த காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.