குளிர் அடிக்கும் நேரத்தில் கத கதப்பாக மாறும் ஹீட்டிங் டி ஷர்ட்

நாம் அணிந்திருக்கும் ஆடைகளைத் தாண்டி குளிர் அடித்தால் என்ன செய்வோம். ஒன்று அணிந்திருக்கும் ஆடையின் மீது Sweater மாட்டிக் கொள்வோம் அல்லது ஒரு போர்வை எடுத்து போர்த்திக் கொள்வோம். இப்படி இல்லாமல் நாம் அணிந்திருக்கும் டீ ஷர்ட்டையே கத கதப்பாக வைத்துக் கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா.

Credit : Raymond De Leon

இந்த வசதியைத் தான் PolarSeal Heated Tops வழங்குகின்றது. இந்த டீ ஷர்ட்டை தேவைப்படும் நேரத்தில் இவற்றில் உள்ள Heating Zone ஐப் பயன்படுத்தி கத கதப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த டி ஷர்ட்டில் வெப்பத்தை உருவாக்குவதற்காகவே இதன் பின் புறத்தில் இரண்டு Heating Zone கொடுக்கப்பபட்டுள்ளது. அதே போல் இந்த டி ஷர்ட்டின் கைப் பகுதியில் Heating Zone ஐ ஆன் செய்வதற்கு பட்டன் கொடுக்கப் பட்டுள்ளது.இந்த பட்டனைப் பயன்படுத்தி Low, Medium, High என்று மூன்று அளவுகளில் வெப்பத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்த டி ஷர்ட்டிற்கு தேவையான மின்சாரத்தை பவர் பேங்க் மூலம் கொடுக்க வேண்டும். 10000 mAh பவர் பேங்கைக் கொண்டு High லெவலில் தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கு இந்த டீஷர்ட்டில் வெப்பத்தை உருவாக்க முடியும். இதே தேவைப் படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்தினால் ஒரு நாள் முழுமைக்கும் கூட வெப்பத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். தற்போது தயாரிப்பில் இருக்கும் இந்த டீ ஷர்ட் வரும் நவம்பர் மாதத்தில் விற்பனைக்கு வருகின்றது.