பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் நான்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்

1.Redmi Note 4

Redmi Note 4 ஸ்மார்ட்போன், தொடர்ந்து பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை வழங்கி வரும் சியாமி நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த குவால்காம் ஸ்நாப் டிராகன் 625 பிராசஸர் இதன் செயல்பாட்டை பிற பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களில் இருந்து உயர்த்திக் காட்டுகின்றது.இவை தவிர இந்த ஸ்மார்ட்போன் 1920 x 1080 Pixels என்ற சிறந்த ரெசல்யூசன் கொண்ட 5.5 இன்ச் HD திரை, 2 GB ரேம், விரல் ரேகை சென்சார், 32 GB இன்டர்னல் மெமரி 128 GB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி, 13 MP மற்றும் 5MP கேமராக்கள், 4100 mAh பேட்டரி என்று சிறந்த தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. Flipkart இணையதளத்தில் இதன் விலை 9,999 ரூபாய் ஆகும்.

இந்த சிறந்த நான்கு ஸ்மார்ட்போன்களை பற்றியும் விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.

2.Lenovo K6 Power

தற்போது சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிராண்ட் என்றால் அது லெனோவா தான்.முன்பு இந்த இடத்தில் இருந்த சாம்சங் நிறுவனத்தை லெனோவா ஓரம்கட்டி விட்டது. லெனோவா நிறுவனம் பட்ஜெட் விலையில் தொடர்ந்து பல ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வந்தாலும், இப்போது இருப்பதிலேயே சிறந்த பட்ஜெட் விலை லெனோவா ஸ்மார்ட் போன் என்றால் அது Lenovo K6 Power தான்.இந்த ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் 3GB ரேம் மற்றும் 4000 mAh பேட்டரி கொண்டுள்ளது. இவை தவிர இந்த ஸ்மார்ட் போன் 5 இன்ச் HD திரை , 13 MP மற்றும் 8 MP கேமராக்கள், ஸ்நாப் டிராகன் 430 ஆக்டா கோர் பிராசஸர், 32GB இன்டர்னல் மெமரி, 128GB வரை நீட்டிக்கும் வசதி என்று சிறந்த தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.

3.Asus Zenfone max

பட்ஜெட் விலையில் நல்ல ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் மற்றொரு சிறந்த நிறுவனமாக அஸஸ் விளங்குகின்றது. அஸஸ் நிறுவனத்தின் ஸென்போன் வரிசை ஸ்மார்ட்போன்கள் பிரபலமானவை. அந்த வகையில் Asus Zenfone Max பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாக விளங்குகின்றது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கியச் சிறப்பு இதன் அதிக திறனுள்ள 5000 mAh பேட்டரியாகும். இந்த பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக நேரம் மின்சக்தியை சேமித்து வைக்கும் திறனுள்ளது.இது தவிர இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் HD திரை, 2 GB ரேம், 16 GB இன்டர்னல் மெமரி 64 GB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி, குவால்காம் ஸ்நாப்டிராகன் 410 பிராசஸர், 13MP மற்றும் 5 MP கேமராக்கள் போன்ற தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளன. Flipkart இணையதளத்தில் இதன் விலை 9,999 ரூபாய் ஆகும்.

4.Moto E4 Plus

பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்கள் மத்தியில் மோட்டோரோலா ஸ்மார்ட் போன்களுக்கு தனி மதிப்பு உள்ளது.மோட்டோரோலா நிறுவனத்தின் Moto E வரிசை ஸ்மார்ட் போன்கள் வாடிக்கையாளர்களால் விரும்பி வாங்கப்படுபவையாகும். மோட்டோரோலா நிறுவனம் தற்போது  இந்த Moto E வரிசையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் Moto E4 Plus ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.இந்த ஸ்மார்ட் போன் பத்தாயிரத்திற்கும் குறைவான விலையில் 3GB ரேம் , 5000  mAh பேட்டரி, 5.5 இன்ச் HD  திரை என்று மிகச் சிறந்த தொழில் நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.இவை தவிர இந்த ஸ்மார்ட் போன் MediaTek 1.3GHz Processor, 13 MP மற்றும் 5 MP கேமராக்கள், 32 GB  இன்டர்னல் மெமரி 128 GB வரை நீட்டிக்கும் வசதி என்று தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.Flipkart இணையதளத்தில் இதன் விலை 9,999 ரூபாய் ஆகும்.