உலகிலேயே மிகப் பெரிய, ஓடக்கூடிய மோட்டார் பைக் ( வீடியோ)

அமெரிக்காவை  சேர்ந்த Gregory Dunham என்பவர் உலகிலேயே அதிக உயரமுள்ள, ஓடக்கூடிய மோட்டார் பைக்கை உருவாக்கியுள்ளார்.இந்த மோட்டார் பைக் 11.3 அடி உயரமுள்ளது.அவர் இந்த பைக்கிற்கு Dream Big என்று பெயரிட்டுள்ளார்.இந்த பைக்கின் எடை 2.948 டன் ஆகும்.இந்த பைக்கில்  502 cu in (8.2 litre) V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த பைக்கின் டயர் ஒவ்வொன்றும் 1.88 மீட்டர் உயரம் கொண்டுள்ளது

Credit : Jynx Productions

Dunham மூன்று வருடத்தில் 3 லட்சம் டாலர்களை செலவிட்டு இந்த பைக்கை உருவாக்கியுள்ளார்.இந்த பைக்கால் அதிக பட்சமாக மணிக்கு 65 மைல் வேகத்தில் செல்ல முடியும்.

இது தோற்றத்தில் பைக்கைப் போல இருந்தாலும் இதில் உள்ள பெரிய ஹேண்டில்பாரைக் கொண்டு இந்த பைக்கை திருப்ப முடியாது.எனவே இந்த பைக்கில் காருக்கு இருப்பதை போல ஒரு ஸ்டியரிங் கொடுக்கப் பட்டுள்ளது.