வைரல் வீடியோ : வளர்ப்பவரை ஒருவர் அடிப்பதைக் கண்டு காப்பாற்ற ஓடி வரும் யானை

சில விலங்குகள் அதை வளர்ப்பவர்களிடம் அளவில்லாத பாசத்தைக் காட்டும்.யானைகளுக்கு அதில் முக்கிய இடம் உள்ளது. மற்ற விலங்குகள் காட்டும் பாசத்தை விட யானைகள் காட்டும் பாசம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். அதற்கு காரணம் யானையின் மிகப் பெரிய தோற்றம் தான்.அவ்வளவு பெரிய விலங்கு குழந்தையைப் போல் மனிதர்களிடம் காட்டும் அன்பு எப்போதும் வியப்பிற்கு உரியது.

இப்படி யானைகள் மனிதர்களிடம் காட்டும் அன்புகள் தற்போது வீடியோக்களாக வெளிவந்து வைரல் ஹிட்டாகின்றன.

Credit : ViralHog

சில மாதங்களுக்கு முன்பு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை காப்பாற்ற ஒரு யானை ஆற்றில் இறங்கிய வீடியோ வைரல் ஹிட்டானது. அதே போல் தான் இந்த வீடியோவில் ஒரு யானை அதை வளர்ப்பவருடன் ஒருவர் சண்டை போடுவதைக் கண்டு அவரைக் காப்பாற்ற ஓடி வருகின்றது.