ஸ்மார்ட்போன் கேமராவை சூப்பராக மாற்றும் 300 ரூபாய்க்கும் குறைவான லென்ஸ் கிட்

ஸ்மார்ட்போனின் முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று புகைப்படம் எடுக்க உதவுவது.ஒரு நல்ல புகைப்படம் எடுக்க சிறந்த திறன்களைக் கொண்ட கேமரா வேண்டும். பெரும்பாலும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்களில் தான் சிறந்த கேமராக்கள் இடம்பெற்றிருக்கும்.

கேமராவிற்காகவே அதிக பணம் செலவு செய்து ஸ்மார்ட் போன் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் மிகக் குறைந்த விலையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களின் கேமராவையும் சூப்பராக மாற்றலாம். இதற்கு உதவக் கூடிய லென்ஸ் கிட்டுகள் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

fisheye

அந்த வகையில் Photron Universal Clip-On 3 in 1 லென்ஸ் கிட் பற்றி தான் தற்போது பார்க்கப் போகின்றோம்.இந்த லென்ஸ் கிட்டில் மூன்று வித லென்ஸ்கள் இடம் பெற்றுள்ளன.முதலாவது Fish Eye லென்ஸ்.இது Ultra Wide Angle லென்ஸாக பயன்படுகின்றது.இந்த லென்ஸைப் பயன்படுத்தி வட்ட வடிவத்தில் உள்ள பொருட்களை அருமையாக புகைப்படம் எடுக்கலாம்.

macro

அடுத்தது Macro Lens, இந்த லென்ஸ் அருகில் உள்ள பொருட்களை மிகத் தெளிவாக அதிக தரத்துடன் புகைப்படம் எடுக்க உதவுகின்றது .மூன்றாவதாக Wide Angle Lens, இந்த லென்ஸ் அகலமாக உள்ள காட்சிகளை தெளிவாக புகைப்படம் எடுக்க பயன்படுகின்றது.இந்த லென்ஸைப் பயன்படுத்தி க்ரூப் போட்டோ சிறப்பாக எடுக்க முடியும்.

61s-LOstjAL

தற்போது அமேசானில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த Photron Universal Clip-On 3 in 1 ன் விலை ரூபாய் 199 ஆகும்.