தண்டவாளங்கள் இல்லாமல் வெறும் எலெக்ட்ரானிக் கோடுகள் மீதே ஓடும் ரயில் (வீடியோ இணைப்பு)

ரயில் கண்டுபிடித்து இரு நூறுஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.ரயிலில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் வந்து இருந்தாலும் அடிப்படை விஷயங்கள் மாறவே இல்லை. முக்கியமாக ரயில் ஓட பயன்படும் தண்டவாளங்களை சொல்லலாம். ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை இரும்பால் ஆன தண்டவாளங்கள் பயன்படுத்தப்படுகின்றது

எதிர்காலத்தில் இந்த தண்டவாளங்களிலும் மாற்றம் வர போகின்றது.அதாவது எதிர்காலத்தில் தண்டவாளங்களே இருக்காது அதற்கு பதில் எலக்ட்ரானிக் குறியீடுகள் ரயில் செல்ல வேண்டிய பாதையில் அமைக்கப்பட்டிற்கும். சென்சாரைப் பயன்படுத்தி இந்த குறியீடுகளை புரிந்து கொண்டு ரயில் அந்த திசையிலேயே செல்லும்.

Credit : CGTN

இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில் தற்போது சீனாவில் Hunan Province ல் உள்ள Zhuzhou நகரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 32 மீட்டர் நீளமும் 3.4 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ரயில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் 307 பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் திறனுடையது. இந்த ரயில் சாலையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள white-dotted குறியீடுகளை நூற்றுக்கும் மேற்பட்ட சென்சார்கள் மூலம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற திசையில் ஓடுகின்றது.