நாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ

பொதுவாக மீன்கள் நீரிலிருந்து துள்ளிக் குதிக்கும் காட்சியைப் பார்க்க அத்தனை பரவசமாக இருக்கும்.சில மீன்கள் இயல்பாகவே அவ்வப்போது நீரிலிருந்து துள்ளிக் குதிக்கும்.சில மீன்கள் மகிழ்ச்சியாக விளையாடும் நேரத்தில் தான் நீரிலிருந்து துள்ளிக் குதிக்கும்.

Craig Capehart என்ற Scuba Diving Player அவரது மூன்று நண்பர்களுடன் சவுத் ஆப்ரிக்காவின்,Eastern Cape Province ல் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிக்கு Sardine மீன்களை பிடிப்பதற்காக சென்று இருந்தார்.

 

Flipkart Deal of the Day :

American Tourister, Skybags, Wildcraft, Puma  பேக்குகளுக்கு 70% வரை தள்ளுபடி

 

Credit : Craig Capehart

அப்போது எதிர்பாராத விதமாக நாற்பதாயிரம் கிலோ எடையுள்ள ஹம்பக் வகை திமிங்கலம் ஒன்று அதன் குட்டியுடன் நீரில் துள்ளிக் குதித்து விளையாடும் காட்சி அவர்களுக்கு கிடைத்துள்ளது.அப்போது அந்த பெரிய ஹம்பக் வகை திமிங்கலம் நீரிலிருந்து அதன் முழு உடலும் வெளியே தெரியும் படி துள்ளிக் குதித்து விளையாடியுள்ளது.

இதுவரையில் இந்த மாதிரி நீரில் இருந்து உடல் முழுவதும் வெளியே தெரியும்படி ஹம்பக் வகை திமிங்கலம் துள்ளிக் குதிக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டதில்லை. இதுவரையில் டால்பின் , சுறாக்கள் ஆகியவை நீரிலிருந்து வெளியே துள்ளிக் குதிக்கும் காட்சிகள் உள்ளன. ஆனால் ஹம்பக் வகை திமிங்கலம் பொறுத்தவரையில் இது தான் முதல் பதிவு.