உலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்

நாம் எல்லாம் கோடைக் காலத்தில் மட்டுமே குளிர் பிரதேசங்களுக்கு செல்ல விரும்புவோம். மற்ற படி மார்கழி மாத குளிரைக் கூட நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால் பூமியில் சில பகுதிகளில் எல்லா நாட்களும் பனிப் பொழிவும் அளவுக்கு அதிகமான குளிரும் இருக்கத்தான் செய்கின்றது. இந்த பகுதிகளிலும் மக்கள் இயல்பாக வாழத்தான் செய்கிறார்கள். சரி உலகத்திலேயே மிகவும் குளிரான ஊர் எது தெரியுமா?.

ரஷ்யாவில் உள்ள Oymyakon என்ற ஊர் தான் உலகத்திலேயே மிகவும் குளிர்ச்சியான ஊர். குளிர் காலத்தில் இந்த ஊரின் சராசரி வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்ஸியஸ் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1933 ஆம் ஆண்டு இந்த ஊரின் வெப்பநிலை மிகவும் குறைவாக மைனஸ் 67.7 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு சென்றுள்ளது.

ஐந்நூறு பேர் வாசிக்கக் கூடிய இந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து 750 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் விவசாயம் செய்வதற்கு எல்லாம் வாய்ப்பு இல்லை.அதனால் இந்த ஊரில் வசிப்பவர்களின் முக்கிய உணவு மாமிசம் தான். இந்த ஊரில் மீன் மற்றும் குதிரை இறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றன.

 

Credit : geoffmackley

இந்த ஊரில் எடுக்கப்பட்ட சில அசத்தலான போட்டோக்களை இங்கு காணலாம்.

#1

3

 

#2

4

 

#3

5

 

#4

6

 

#5

7

 

#6

8

 

Photos Credit : amoschapplephoto.com