எப்படி எல்லாம் யோசிக்கிறானுங்க என்று வியக்க வைக்கும் 10 கிரியேட்டிவான தெரு விளம்பரங்கள்

நுகர்வோர்களை அதிக அளவில் கவர்ந்திழுக்கும் தன்மை தெரு விளம்பரங்களுக்கு உண்டு. நம் ஊரில் சாலை தோறும் எங்கு பார்த்தாலும் போஸ்ட்டர்களும் பேனர்களும் வைக்கப்படுவது இதனால் தான். இந்த தெரு விளம்பரங்களையே பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக கிரியேட்டிவாக செய்து அசத்துபவர்களும் உண்டு. இப்படி 10 வித்தியாசமான கிரியேட்டிவான தெரு விளம்பரங்களை இங்கே பார்க்கலாம்.

 

#1  காரின் பின் புறம் அமர்ந்திருப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது அவசியம். இல்லை என்றால் விபத்தின் போது ஆங்கிரி பேர்ட் பறவையைப் போல தூக்கி வீசப் படுவீர்கள் என்று உணர்த்தும் விளம்பரம்.

s1

Credit : www.wherecoolthingshappen.com

 

#2  கிட்கேட் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் பெஞ்ச்

s2

Credit : www.diply.com

 

#3  கட்டிடத்தில் இருந்து பெயிண்ட் கொட்டி பார்க்கிங் செய்யும் இடத்தில் பரவி இருப்பத்தைப் போன்ற விளம்பரம்

s3

Credit : www.tribalmarketinglab.jp

 

#4  கட்டிடங்களையே இழுத்து உடற்பயிற்சி செய்வதாக காட்டும் ஜிம்மிற்க்கான விளம்பரம்

s4

Credit : www.admaimai.com

 

#5  கட்டிடத்தின் மாடியிலிருந்து கோக்கோ கோலா ஊற்றுவதை போன்ற விளம்பரம்

s5

Credit : www.inspirationsjunkie.wordpress.com

 

#6  நடுத்தெருவில் அந்தரத்தில் நெயில்பாலிஷ் பாட்டில் தொங்கி கொண்டிருப்பதாக காட்டும் நெயில் பாலிஷ்
விளம்பரம்

s6

Credit : www.astuces-femmes.com

 

#7  மேகத்திற்கு பெயிண்ட் அடிப்பதாக காட்டும் பெர்கர் பெயிண்ட் விளம்பரம்

s7

Credit : www.firewireblog.com

 

#8  ஐபோனில் அதிக அளவு அப்ளிகேஷன்கள் உள்ளதை விவரிக்கும் விளம்பரம்

s8

Credit : www.i.pinimg.com

 

#9  விளக்கு கம்பத்தையே ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தாக காட்டும் மிருகக்காட்சி சாலைக்கான விளம்பரம்

s9

Credit : www.i.pinimg.com

 

#10  வாகனங்களை சாப்பிடுவதை போல் காட்டும் ஹோட்டலுக்கான விளம்பரம்

s10

Credit : www.wherecoolthingshappen.com