உலகத்திலேயே அதிக மழை பெய்யும் ஊர்,அட இந்தியாவுல தான் இருக்கு ( புகைப்படங்கள் இணைப்பு )

ஒவ்வொரு வருடமும் பருவமழையை எதிர்பார்த்து காத்திருப்பது நமக்கு வழக்கமாகி விட்டது. மாறி வரும் சுற்றுப்புற சூழலால் மழை பொழிவது குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் உலகின் சில பகுதிகளில் ஆண்டு தோறும் மழை கொட்டு கொட்டென்று கொட்டுகின்றது. அந்த வகையில் உலகத்திலேயே அதிக மழை பெய்யும் ஊராக மாசின்ரம் விளங்குகின்றது. இந்த ஊர் வேறு எங்கும் இல்லை,நம் நாட்டில் உள்ள மேகாலயா மாநிலத்தில் தான் இந்த ஊர் அமைந்துள்ளது. மாசின்ரம்மின் வருடாந்திர சராசரி
மழை பொலிவு 11,872 மில்லி மீட்டர்களாகும்.

1

Credit : Telugupopular

மாசின்ரம் மேகலயாவின் தலைநகரான ஷில்லாங்கிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உலகத்திலேயே அதிக மழை பொழியும் மற்றொரு இடமான சிரபூஞ்சியும் மாசின்ரம்மிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாசின்ரம்மின் சில புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஆண்டுதோறும் தொடர்ந்த மழைப் பொலிவு இருப்பதால்  இந்த ஊரில் வசிக்கும் மக்கள் மழையிலிருந்து காத்துக் கொள்ள வீட்டை வெளியில் செல்லும் போது எல்லாம் புற்களால் செய்யப்பட்ட கூடையை பயன்படுத்துகின்றனர்.

rainy

Credit : Telugupopular

 

6_1466325293

Credit : Dailymail

 

77_1466325331

Credit : Dailymail

 

1112322_wallpaper2_1466324941

Credit : Hindustantimes

மாசின்ரம்மிற்கு அருகில் தான் மரத்தின் வேர்களால் இயற்கையாக உருவாகிய அசத்தலான பாலமும் காணப்படுகின்றது.

5