இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக நீந்துகின்ற, ஒன்றாக தூங்குகின்ற அளவுக்கு நண்பர்கள்

உண்மையான அன்பு அக்கறை இருக்குமிடத்தில் நட்பு உருவாகி விடும். அது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இப்படி ஒரு மனிதருக்கும் முதலைக்கும் இடையேயான நட்பைப் பற்றி இங்கே பார்க்கப் போகின்றோம். போச்சோ என்ற முதலையும், ஜில்பெர்ட்டோ ஷெட்டென் என்ற மனிதரும் கட்டிப் பிடித்துக் கொள்கின்ற, ஒன்றாக நீந்துகின்ற அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் .

Chito-Pocho-2

மீனவரும் இயற்கை ஆர்வலருமான ஜில்பெர்ட்டோ ஷெட்டென் இந்த முதலையை முதலில் சந்தித்தது 1991 ஆம் ஆண்டில் தான். அப்போது காயம் பட்டு இருந்த முதலையை ஷெட்டென் அவர் நண்பர் உதவியுடன் கோஸ்ட்டா ரிக்காவின் சிக்குயெர்ஸ் நகருக்கு எடுத்துச் சென்று மருத்துவ உதவி செய்துள்ளார். இந்த முதலையின் காயம் முழுவதும் குணமாக ஆறு மாதம் ஆகியுள்ளது. அப்போது எல்லாம் ஷெட்டென் அவரது பெரும்பாலான நேரத்தை முதலையை கவனிப்பதிலேயே செலவிட்டுள்ளார். காயத்திலிருந்து முழுவதும் குணமடைந்த முதலை ஒரு கட்டத்தில் ஜில்பெர்ட்டோ ஷெட்டென்னின் அன்பை புரிந்து கொண்டு அவருடன் நண்பனாகி விட்டது.

கடந்த 2000 ஆம் ஆண்டி கோஸ்ட்டா ரிக்கா நாட்டை சேர்ந்த சேனல் 7 இவர்களது நட்பை படம் பிடித்து வெளியிட்ட பின்பு உலகம் முழுவதிற்கும் இந்த ஆச்சர்யமான நட்பு தெரிய வந்தது.

Roger Horrocks has heard stories of men “calling” wild crocodiles out of the river and a crocodile shaman who can swim and ride on the back of a giant crocodile without being eaten.  Roger has experienced first hand that these ancient reptiles are possible of showing emotion and he feels a deep connection to crocodiles. He is compelled to investigate these stories and hopes to meet “Chito”, the crocodile shaman. Shortly after filming, Chito’s beloved crocodile, Pocho died leaving this film as the only documentary of his extraordinary life.   (Photo Credit: Roger Horrocks/ NHU AFRICA)

Chito-Pocho-3

Chito-Pocho-4

Chito-Pocho-5

இப்படி ஒரு மனிதருடன் நெருங்கிப் பழகிய இந்த முதலை தற்போது உயிருடன் இல்லை. போச்சோ 2011 ஆம் ஆண்டே இறந்து விட்டது. ஷெட்டென் தற்போது இன்னொரு முதலையுடன் நெருங்கிப் பழக முயற்சி செய்து வருகிறார். ஆனால் அந்த முதலை போச்சோ அளவிற்கு பழகுவதில்லை.

Via : WB